கன்னி ராசி அன்பர்களே …! வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்காமல் இன்று சிந்தனை மேலோங்கும். பெண்ணின் பாசம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் உங்களுக்கு நடைபெறும். இன்று உயர்வு தாழ்வு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பது குறிக்கோளாக செயல்படுவீர்கள். தனவரவும் சீராகவே இருக்கும். மனக்கவலை நீக்கும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். இன்று யாரையும் எடுத்தெறிந்து மட்டும் பேச வேண்டாம். எந்த ஒரு விஷயத்திற்காகவும் அலட்சியம் காட்டவேண்டாம். பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம்.
கூடுமானவரை இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.