கன்னி ராசி அன்பர்களே …! இன்று தொட்ட காரியம் துலங்கும் நாளாக இருக்கும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் இவர்கள் குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் நடைபெறலாம். இன்று காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம் திட்ட மிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. எதிர்பாராத பணவரவு ஏற்படலாம்.
திடீர் தடை தாமதம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கூடுமானவரை அனைவரும் அனுசரித்து செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் உண்டாக்கலாம். நிதி மேலாண்மையில் கவனம் இருக்கட்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம்.
காதலர்கள் இன்று கண்டிப்பாக வாக்குவாதங்கள் இல்லாமல் தான் பேசவேண்டும். பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் அது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.