Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…பொருளாதார நிலை உயரும்….காதலர்களுக்கு இனிமையான நாள்…!

கன்னி ராசி அன்பர்களே …!      இன்றைய நாள் முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். நாட்டுப்பற்று மிக்க நண்பர்களால் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடும். அக்கம்பக்கத்தினரிடம் சண்டைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கௌரவம் பாதிக்கப்படும் சூழ்நிலை கொஞ்சம் வரலாம்.

தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் உன்னதமான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஓரளவு கைகொடுக்கும். புதிய முயற்சிகளில் கொஞ்சம் கவனமாக ஈடுபடுங்கள். எளிதாக வெற்றி பெற்றுவிடலாம். வசீகரமான பேச்சால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

காதலர்களுக்கும் இனிமை காணும் நாளாக இருக்கின்றது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |