Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…செல்வநிலை உயரும்….எதிர்ப்புகள் உண்டாகும்….!

கன்னி ராசி அன்பர்களே …!    பாக்கிய விருத்தி ஏற்படும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். செல்வநிலை உயரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய சூழல் உண்டு. எந்த ஒரு காரியமும் எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே வந்து சேரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.

தொழில் தொடர்பான செலவுகள் கொஞ்சம் கூடும். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தெரியலாம் திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். இன்று எதையும் யோசித்து செய்யுங்கள் முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். இன்று காதலர்களுக்கு இனிமை காணும் நாளாகத்தான் இருக்கும்.

அனைத்து விஷயங்களிலும் நல்ல வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |