கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய நலம் விரும்பியவரை சந்திப்பீர்கள். அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க போட்ட திட்டங்கள் ஓரளவு நிறைவேறும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.
கணவர் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைத்து பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளுங்கள். கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.