Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…பிரச்சினைகள் தீரும்… மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று உங்களுடைய முக்கியமான செயல்களை தயவுசெய்து யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய சுய தேவையை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்.

எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.  வாக்குவாதங்களை தவிர்ப்பது பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது கொஞ்சம் கடினம்தான். சிலர் எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை கொடுக்கலாம். கவனமாக இருங்கள் சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். காதலர்கள் இன்று பேச்சில் நிதானம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே பேசும்பொழுது எந்தவித வாக்குவாதங்கள் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள்.

பெரியோரின் ஆலோசனை உங்களுக்கு இன்று உதவியாகவே இருக்கும். என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |