Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எதிர்பார்ப்புகள் நிறைவேறும்…காரியத்தடை அகலும்…!

கன்னி ராசி அன்பர்களே …!  இன்று அறிமுகமில்லாத எவரிடமும் அதிகமாக பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதலாக பணிபுரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். காரியத்தில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் இருக்கும். கருத்து வேற்றுமை நீங்கும். உங்களுடைய வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

உங்களுடைய பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள்.  உங்களது உடைமைகளை கவனமாகப் பார்த்துக்கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லவேண்டும். நிதி பற்றாக்குறை ஓரளவு இருக்கத்தான் செய்யும் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள்.

காதலர்களுக்கு இன்று உற்சாகமாக நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |