கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை அதிகரிக்கும். உபரி பண வருமானமும் வந்து சேரும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் சேர்ந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை குழப்பம் போன்றவை இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். மற்றவரிடம் நீங்கள் அன்பு செலுத்துவீர்கள்.
அதேபோல கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். இந்த விஷயத்தில் நீங்க கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். மனைவியிடம் கூடுமானவரை அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதையும் நீங்கள் கூர்ந்து கவனித்து அதற்கேற்றாற் போல் பதில் கொடுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் பேசும் பொழுது எந்த ஒரு விதத்திலும் கோபப்பட வேண்டாம். உறவினரிடம் எந்த ஒரு உறுதியும் தராமல் இருப்பது நல்லது. சின்ன சின்ன செலவுகளை சந்திக்க நேரலாம். உழைப்பு சற்று குறைவாகவே கிடைக்கும். உங்களுக்கு தொல்லை தருபவரை இடம் தயவு செய்து நீங்கள் கொஞ்சம் விலகி இருங்கள்.
பயணங்கள் செல்லுமாயின் பொறுமையாகவும், நிதானமாகவும் செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் பேச்சில் நிதானத்தை செலுத்த வேண்டும். வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெளிர் பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்.