கடக ராசி அன்பர்களே….! இன்று எதையும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இனிமையான நாளாக தான் இருக்கும். சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்துக் கொள்வீர்கள் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் பிரச்சினையை சமாளிக்கும் திறமையும் அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் சிறப்பாக நடப்பதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணங்களில் சிலர் முன்னேற்றமான தகவல்கள் வந்துசேரும். அதேபோல வெளியூரிலிருந்து உங்களுக்கு சிறப்பான தகவல்கள் இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் இருக்கும். அதேபோல் காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
இன்று கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மக்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிதாக இருக்கக்கூடிய முயற்சிகளிலும் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.