கன்னி ராசி அன்பர்களே …! தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர்கள் கிடைப்பது கொஞ்சம் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். கூடுமானவரை கடன் விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பொதுப் பிரச்சினைகளில் இன்று ஏதும் தலையிட வேண்டாம். வீண் பிரச்சினைகளை எந்தவித அறிகுறியும் சொல்ல வேண்டாம். அதேபோல பஞ்சாயத்துக்கள் ஏதும் கலந்து கொள்ள வேண்டாம்.
வாக்குறுதிகள் ஏதும் தயவு செய்து கொடுக்க வேண்டாம். இந்த விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். நிதி மேலாண்மையில் எப்போதும் கவனம் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறை இருந்துக் கொண்டேதான் இருக்கும். கொஞ்சம் நீங்கள் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வது நல்லது. சில விஷயங்கள் காலத் தாமதம்தான் நடந்து முடியும்.
ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். நல்ல தகவல்கள் அங்கிருந்து வந்து சேரும். அரசாங்க வகையில் உதவிகள் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்.