கன்னி ராசி அன்பர்களே …! இன்றைய நாள் உங்களுக்கு யோகமான நாளாக இருக்கும். உள்ளம் மகிழும் தகவல் இல்லம் தேடி வரக்கூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும் வகையில் இருக்கும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத இடங்களில் வெற்றி அடைய முடியும். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.
விவசாயிகள் தொழிலாளர்களும் நன்மைகள் கிடைக்கும். சின்ன சின்ன திண்டாட்டங்கள் வந்தாலும் கவலை மட்டும் கொள்ளாதீர்கள். அது போல சில விஷயங்கள் காலத் தாமதமாக தான் நடந்து முடியும். அதனால் நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம். மனக்கவலைகள் கொள்ள வேண்டாம். சில விஷயங்களை ரொம்ப கவனமாக செய்ய வேண்டி இருக்கும். பொருட்கள் மீது கவனம் கண்டிப்பாக வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக கவனத்துடன் இருக்க வேண்டும்.
பெண்கள் சமையல் அறையில் கொஞ்சம் கவனமாகவே சமைக்க வேண்டும். காதலர்களுக்கு இன்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக தான் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடத்த முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.