கன்னி ராசி அன்பர்களே …! இன்று பணவரவு அதிகரித்து பரவசப்படுத்தும் நாளாக இருக்கும். மனம் விரும்பியும் நபரின் அருகாமை மகிழ்ச்சியை கொடுக்கும். பிரிவு ஏற்பட்ட பிறகு சரியாகி இணைந்து மகிழ்வார்கள். கணவர் மனைவிக்கிடையே அன்பு இன்று அதிகமாக இருக்கும். ஆனால் சுபவிரயங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். தங்களுக்கு சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்தி எந்தவொரு விஷயத்திலும் ஈடுபடவேண்டாம்.
எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதுர்யமான பேச்சு மூலம் காரிய வெற்றி அடைவீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உச்சத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் கொடுக்கல் வாங்கல் கூட இன்று ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
உடல் ஆரோக்கியம் நல்ல படியாகத்தான் இருக்கும். காதலர்களுக்கும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.