கன்னி ராசி அன்பர்களே …! இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கொடுக்கும். இடமாற்றம் பற்றிய இணைய தகவல்கள் வந்துசேரும். உறவினர்கள் வழியில் சிறு பிழையும் உண்டாகும். செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சரியான பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சி ஒரளவு நல்ல பலனையே கொடுக்கும். செலவுகள் மட்டும் அதிகமாக தான் இருக்கும்.
கனரக தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். நட்பால் ஆதாயம் தேடிக் கொள்வீர்கள். பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.
இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.