கன்னி ராசி அன்பர்களே …! இன்று எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். உங்களுடைய ஏக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். பெரியோர்களின் உதவியால் சில நன்மைகள் நடக்கும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தை கொடுக்கலாம். செல்வாக்கு அதிகரிக்கும் நாளாக இருக்கும். அடுத்தவர் மனதில் நிம்மதியை கொடுப்பீர்கள். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
கூடுமானவரை அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள். வாகனங்களில் செல்லும்போது பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக இருங்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போதும் ரொம்ப கவனமாக இருங்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இனிமையான வார்த்தைகளால் அனைவரையும் கவர்வீர்கள். வசீகரமான தோற்றத்துடன் கூடிய சூழலும் இருக்கும்.
இன்று காதலர்களுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.