கன்னி ராசி அன்பர்களே …! இன்று உடன் பணிபுரிபவர்கள் நண்பர் உறவினர் தகுந்த ஊக்கத்தை கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். சராசரி பணவரவு உடன் நிலுவைப்பணம் வசூலாகும். பெண்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வார்கள். இன்று பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நினைத்தை முடித்து விட வேண்டும் என்பதில் அதிக கவனம் ஏற்படும்.
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று எப்படிப்பட்ட வேலையையும் திறம்பட செய்து கொடுப்பீர்கள். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதாவது மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம்.
காதல்கள் எப்போதும் போலவே வாக்குவாதங்கள் செய்யாமல் மிதமாக இருக்கவும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை என்பது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும் . அதுமட்டுமில்லாமல் இன்று பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.