Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…உடல் சோர்வு ஏற்படும்…கவலை உண்டாகும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று எதையும் நீங்கள் யோசித்து தான் செய்ய வேண்டி இருக்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் வாரி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவரிடம் கோபம் கொள்ளாமல் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக தான் செல்ல வேண்டும். இப்படி அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதே போல பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கும்.

அந்த வாய்ப்பு கொஞ்சம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மன நிம்மதி கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவதற்கு கடினமான சூழ்நிலையை இயக்கும். கடினமான உழைப்பு இருப்பதால் உடல் சோர்வு ஏற்படும். புதிய ஆட்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். முயற்சி எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.

நீங்கள் எப்போதுமே மனதை ஒருநிலைப்படுத்தி அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வீர்கள். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். பயணம் செல்ல நேரிடலாம். பயணத்தின் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதம் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லீங்க என்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நீலம்.

Categories

Tech |