Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எண்ணம் மேலோங்கும்…உழைப்பு அதிகரிக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய செயல் திறனைக் கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பணவரவால்  தேவையை நிறைவேற்றி கொள்வீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட தூர பயணம் செல்லலாம் என்ற எண்ணம் மேலோங்கும். பயணத்தின்போது கவனம் இருக்கட்டும்.

எதுவாக இருந்தாலும் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். தொழில்  துறையில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அவர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும். ஆயுதங்களை கையாளும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேபோல விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் இருக்கட்டும்.  எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வீண் செலவை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |