Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்…திட்டங்கள் வெற்றியடையும் …!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய யதார்த்தப் பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உருவாகும். புதிய இனங்களில் செலவுகள் அதிகமாக இருக்கும். மருத்துவ சிகிச்சை உடல் நலம் பெற உதவும். தொழில் வியாபாரம் தொடர்பான கடித போக்குவரத்தால் அனுகூலமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த எண்ணங்கள் மேலோங்கும்.

எந்த ஒரு விஷயத்தையும் திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சல் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான துணி போன்றவைகளை வாங்க கூடும். பெண்கள் குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொண்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமையும் குறையும்.

காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். புதியதாக காதல் வயப்பட்ட கூடிய சூழலும் இருக்கும்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |