கன்னி ராசி அன்பர்களே …! ஆனந்தம் தரும் காரியங்களைச் செய்யுங்கள். செய்திகள் வந்து சேரும். வீடு வாகன பராமரிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க கூடும். குடும்பத்தில் எதிர் பாராத உறவினர்கள் வருகை இருக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே உடனான உறவு வலுப்பெறும்.
குழந்தைகள் பற்றிய கவலை இருக்கும். அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனமாக இருங்கள். எல்லோரையும் அனுசரித்துச் செல்லுங்கள். காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். சில விஷயங்களில் நீங்கள் ரொம்ப எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.
தயவு செய்து வாக்குவாதத்தில் மட்டு இன்று ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் பச்சை மற்றும் நீல நிறம்.