Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எண்ணங்கள் மேலோங்கும்… சுபகாரியங்கள் நிறைவேறும்…!

கன்னி ராசி அன்பர்களே …!  வியாபார பயணங்களால் லாபம் உங்களுக்கு கூடும். எல்லா வளமும் பெருகும். அழகு பெண்களின் நட்பு கிடைக்கும். இன்று வீட்டை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். சுபகாரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

முயற்சிகளில் சாதகமான பலன் வந்து சேரும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். பண விஷயத்தில் சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். மற்றவர் பார்வையில் படும்படி  பணத்தை நீங்கள் எண்ண வேண்டாம். காதலர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். அதேபோல கொடுக்கல் வாங்கலில் தயவுசெய்து கோபம் கொள்ளாதீர்கள்.

பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போது நிதானமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |