Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஏற்படும்…நிதானம் தேவை …!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் சீர்பெற நவீன மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். அவமானம் வந்து சேரும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வரக்கூடும். பணவரவு நன்றாகவே இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் மனம் செல்லும்.

ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அமைதி என்பது கண்டிப்பாக வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள். காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும்.

பேச்சில் கண்டிப்பாக நிதானம் இருந்தால் மட்டுமே காதல் உங்களுக்கு எந்த வகையிலும் முன்னேற்றத்தை கொடுப்பதாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |