Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…கருத்து வேற்றுமை உண்டாகலாம்…மதிப்பு கூடும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    எதிலும் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் உபரி வருமானங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை கொஞ்சம் ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள்.

காதலர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஸ்டதையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |