Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மகிழ்ச்சி ஏற்படும்…ஆதாயம் உண்டு…!

கன்னி ராசி அன்பர்களே …!     இன்று உங்களுடைய செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவார்கள், மற்றவரை நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருட்களை இரவல் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீர்கள். பகைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மூலம் ஆதாயம் தேடிக் கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். செயலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளை மட்டும் இப்போதைக்கு ஏதும் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் சம்பந்தமான சில பிரச்சினைகள் இருக்கும்.

அதற்கு ஏற்றார்போல் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |