Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மன குழப்பம் நீங்கும்… தைரியம் பிறக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும் தன்மையை கொடுக்கும். மாமன் மைத்துனர் இயன்ற அளவில் உதவி புரிவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்வீர்கள். அனைவரின் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஸ்டதையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருக பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்ல படியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |