Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…மனதைரியம் கூடும்…சிந்தனை திறன் மேலோங்கும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    மனம்விட்டு பேசுவதால் சிரமத்தை நீங்கள் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். செலவில் கண்டிப்பாக சிக்கனத்தை பின்பற்ற வேண்டும். தாயின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். மன தைரியம் கூடும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். எதிர்பார்த்த பணமும் கையில் வந்து சேரும்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வி பற்றிய பயமும் அவ்வப்போது வந்து செல்லும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கப்படும். உங்களுடைய சிந்தனை திறனும் அதிகரிக்கும். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கண்டிப்பாக திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |