கன்னி ராசி அன்பர்களே …! இன்று அவப்பெயர் வராமல் தயவு செய்து நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக உழைப்பு உதவும். முக்கியமான செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவு வகைகளை தயவுசெய்து நீங்கள் உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் செய்பவர்கள் பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைப்பார்கள்.
பண வரவு இருக்கும். நண்பர்களின் சேர்க்கையால் அவமதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உற்சாகமாக இருந்தாலும் கொஞ்சம் மனதில் மட்டும் குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். யாரைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள்.
உங்கள் வேலையை நீங்கள் செய்வது ரொம்ப நல்லது. காதலர்கள் இன்று கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.