Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தடங்கல்கள் ஏற்படும்…எதிலும் நிதானம் தேவை…!

கன்னி ராசி அன்பர்களே …!  இன்று கொஞ்சம் சிக்கல்களை நீங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதேபோல் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும். அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கவனம் செலுத்தியாக வேண்டும். உங்களுடைய பேச்சில் கண்டிப்பாக நிதானம் வேண்டும். புதிதாக எடுக்கக்கூடிய முயற்சியில் சில தடங்கல்கள் ஏற்படும்.

நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். அலுவலகப் பணிகள் கொஞ்சம் தமதமாகவே நடக்கும். குடும்பத்தில் சில சம்பவங்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் சில நேரங்களில் மன இறுக்கமான சூழ்நிலையில் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பேசும் போது நிதானம் வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் பேசும் பொழுதும் அன்பாகவே பேச முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்திற்காக கோபம் கொள்ள வேண்டாம். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைப் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

அமைதியாக இருந்துவிட்டான் எப்பொழுதுமே எந்த பிரச்சனையும் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.இன்று காதலர்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து தான் ஆக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரோம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |