Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தேவைகள் பூர்த்தியாகும்…பெருமை உண்டாகும்….!

கன்னி ராசி அன்பர்களே …!  இன்று பாக்கிகள் வசூலாகி பரவசத்தை கொடுக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இடம், பூமி வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். சரக்குகளை அனுப்பும் பொழுது சேமித்து வைக்கும் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பிள்ளைகள் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். அவர்களிடம் தயவுசெய்து கோபப்பட வேண்டாம். வியாபாரத்தில் சற்று விழிப்புடன் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. காதலர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். அது போலவே கணவர் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம் கையாளும் போது ரொம்ப கவனமா எச்சரிக்கையுடன் இருங்கள்.

ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்துமுடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |