Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…தொய்வு நிலை மாறும்…நிதானம் தேவை…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று வாக்குறுதி நிறைவேறக் கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய யுத்தி பின்பற்ற வேண்டும். மிதமான அளவில் பண வரவு கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் கொட்டும். அவர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கொஞ்சம் கடினமான வேலை இன்று செய்யவேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். அதுபோலவே வயிறு பிரச்சினை இருக்கும் சரிசெய்து கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றை ஈடுபடுங்கள்.

மனம் நிம்மதியாக இருக்கும். இன்று ஓரளவு சிறப்பு காணும் நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |