Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…விரோதிகள் விலகி செல்வார்கள்..குடும்பம் பற்றிய கவலை உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று வியாபார விரோதம் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும்.

உறவினர்கள் நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்தும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். காயங்கள் ஏற்படலாம். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். கல்வியில் வெற்றி இருக்கும்.

மேற்கல்விகாண முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டையும் வணங்குங்கள், உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |