Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…பண வரவு இருக்கும்…மற்றவரை நம்ப வேண்டாம்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். உறவினர்கள் மனம் வருந்தும்படி சில காரியங்களை செய்வீர்கள். தயவுசெய்து உறவினர்களை நீங்கள் குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். அதேபோல வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரம் அதிகரித்து லாபத்தையும் புதிய சேமிப்புகளில் முதலீடு செய்வீர்கள். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். பண வரவு இருக்கும். ஆனால் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்கை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும். மிகவும் அனுகூலமான நாளாக இந்நாள் இருக்கும்.

வாய்ப்புகள் வீடு தேடி வரும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாடு மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |