Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு …முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் …தனித்திறமை வெளிப்படும் நாள் …!!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று  நண்பர்கள் மூலம் சிறு சிறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க கூடும்.  நாடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.  கற்றவரின் பாராட்டுகளால் கனிவு கூடும்.  மதிப்பும் மரியாதையும் இருக்கும்.  எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தொழிலில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும்பொழுது ரொம்ப கவனமாகத்தான் இருக்க வேண்டும்.  மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.  வாகனத்தில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக தான் இருக்கவேண்டும்.

உங்களுடைய தனித்திறமையை நண்பர்கள் பாராட்டுவார்கள். முயற்சிக்குரிய பலன் இன்று கிடைக்குமா என்று சந்தேகம் தான்.  பொறுமையாகவும் இருங்கள்.  ரகசியங்களை இன்று தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.  இன்று பணவரவு ஓரளவு தான் கிடைக்கும்.  இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யுங்கள்.  செய்தபின்பு காரியத்தில் ஈடுபடுங்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலையில் இன்று இருக்கும்.  கவலை வேண்டாம் அது பின்னர் சரியாகிவிடும் சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு எப்பொழுதும் கூடி இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் பொறுமையை மட்டும் கையாளுங்கள்.  அதே போல யாருக்கும் இன்று புதிதாக வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம்.  ஆனால் இன்றைய நாளை நீங்கள் சமாளித்து முன்னேற்றமான நாளாகவே எடுத்து செல்வீர்கள்.  இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால்  காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |