Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு …ஒற்றுமையாக செயல்படுவீர்கள் …நினைத்த காரியம் கைகூடும் …!!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று வெளியூர்,  வெளிநாட்டு தொடர்பு நல்ல மேன்மையை ஏற்படுத்தும்.  கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும் உங்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.  தொழிலாளர்கள் அனுகூலமான செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.  வியாபார தளங்களில்  உற்சாகமான சூழ்நிலை இருக்கும்.  எனினும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

வார்த்தைகளை கோர்த்து போட்டு பேசுவது நன்மையை கொடுக்கும்.  குடும்பத்தில் இருப்பவரிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.  அவரிடம் அமைதியாகப் பேசுங்கள்.  கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு களால் குடும்ப விஷயங்கள் சாதகமாக முடியும்.  பிள்ளைகளால் பெருமை சேரும்.  தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விருவிருப்பு அடையும்.  எடுத்த முயற்சி ஓரளவு வெற்றியைக் கொடுக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுதுஇளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான  திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |