கன்னி ராசி அன்பர்களே….
இன்று உயர்ந்த எண்ணங்களை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்,. புத்திரர் விரும்பிய பொருளை வாங்கி கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
கணவன் மனைவி அனுசரித்து எதையும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது நல்லது. பெண்கள் எந்த ஒரு வேலையும் மனத்திருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றியும் ஏற்படும். பணவரவு இன்று தாராளமாகவே இருக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். திருமண முயற்சிகள், காதலில் வெற்றி போன்றவை ஏற்படக்கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சிறப்பான முன்னேற்றத்தை அடையக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும்.
அதிஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம்பச்சை நிறம்