நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் . இந்நிலையில் டாக்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது .
It's #Doctor month! Gearing up for full-scale promotions 🔥#DoctorFromMarch26 #Doctor @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/oFqjevP4Pc
— KJR Studios (@kjr_studios) March 2, 2021
கண்ணில் வெறியுடன் கோபமாக நிற்கும் சிவகார்த்திகேயன் அருகில் பிரியங்கா மோகன் ,அர்ச்சனா ,யோகி பாபு உள்ளிட்ட பலர் நிற்கின்றனர் . தற்போது டாக்டர் படத்தின் இந்த மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர், டிரைலர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.