Categories
உலக செய்திகள்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…. வடகொரியாவால் பதற்றம்….!!!!

வடகொரியா நாட்டில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்து வருகின்றது. வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, அண்டை நாடுகள் மீது பயணிப்பதை தவிர்க்க, அந்நாடு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க தவறியதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த திட்டம் பாதியில் தோல்வியுற்றதாக கண்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இது குறித்து தென்கொரிய அதிகாரிகள் கூறியதாவது, “முதல் ஏவுகணை வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலிருந்து ஏவப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏவுகணை சுமார் ஒரு மணி நேரம் கழித்து பியோங்யாங்கிற்கு வடக்கே உள்ள கேச்சோனிலிருந்து ஏவப்பட்டது” என கூறியுள்ளனர். முதல் ஏவுகணை ஏவப்பட்டவுடன், ஜப்பான் பிரதமர் Fumio Kishida பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கட்டிடத்தின் சுரங்க அமைப்புகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே மூன்று  பகுதிகளில் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்புகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது குறித்து பிரதமர் Fumio Kishida கூறியதாவது, “வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதல். கோபத்தை தூண்டும் செயல் எனவும் முற்றிலும் மன்னிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து முந்தைய நாள் வட கொரியா ஒரே நாளில் 23 ஏவுகணை ஏவி கொரியா தீபகற்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு ஏவுகணை மட்டும் தென் கொரியாவின் கடற்பகுதியில் 40 மைல்கள் தொலைவில் விழுந்ததாக தகவல் வெளியானது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ பயிற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று கோரிக்கையை வட கொரியா முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |