Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இங்க கட்டியிருந்ததை காணும்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

கன்று குட்டிகளை திருடிச் சென்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் பிச்சை என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிச்சைக்கு சொந்தமான இரண்டு கன்று குட்டிகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் ஆட்டோவில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பிச்சை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோவில் சோதனை செய்த போது அதில் இரண்டு கன்று குட்டிகள் இருந்துள்ளது.

அதன் பின் காவல்துறையினர் ஷேர் ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சொக்கதேவன்பட்டி பகுதியில் வசிக்கும் அழகு பாண்டி மற்றும் வசந்த் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் மாடு கன்றுகளை திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த ஆட்டோ, 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கன்று குட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |