ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. ஓணம் பண்டிகையின் போது பாரம்பரிய உடையணிந்து பூக்களால் கோலமிட்டு இறைவனை வழிபட்டு வணங்குவர்.. ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெறும்.. ஆனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கலையிழந்துள்ளது.. காரணம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் மக்கள் கொண்டாட கூடாது என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மலையாளம் பேசுபவர்கள் அதிகம் பேர் வசித்து வருவதால், அங்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு. வடநேரே உத்தரவு பிறப்பித்துள்ள்ளார்.. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி விடுமுறை என அவர் அறிவித்துள்ளார்.