Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடம் புகட்டணும்…! ”10வருஷம் சூறையாடிட்டாங்க” ஸ்டைலாக விமர்சித்த கனிமொழி …!!

தமிழக மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள் எனவும், பாஜகவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது எனவும் எம்பி கனிமொழி கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்பி கனிமொழி 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, வெற்றிநடை போடும் தமிழகம் என மக்களுடைய வரிப் பணத்தில் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதில் வெற்றி நடைபோடுகிறது என தெரியவில்லை. தமிழகத்தில் வேலை வாய்ப்பும் இல்லை, முதலீடுகளும் வரவில்லை, முதியோர் உதவி தொகை கொடுக்க கூட பணம் இல்லை. விளம்பரத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் கேட்டு தான் எல்லாம் முடிவு எடுக்கிறார்கள். டெல்லியில் இருக்கிறவர்கள் தான் தமிழகத்தின் ஆட்சி செய்கிறார்கள். பாஜகவின் பினாமியாக தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் நாட்டை முழுவதுமாக சூறையாடி விட்டார்கள். எனவே ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். வரும் தேர்தலில் நன்கு பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |