நண்பர்களை வைத்து காவல் துறையினர் போல் நடித்து பணம் கொள்ளை அடித்த கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை என்னும் பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தங்கத்தை கட்டிகளாக வாங்கி தமிழகத்தில் உள்ள பல நகைக் கடைகளுக்கு விற்பனையும் செய்கிறார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபக்குமார் என்பவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் இருவரை நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் தங்க கட்டிகளை கொடுத்து பணம் வாங்கி வரும்படி தெரிவித்துள்ளார். இதன்படி அவர்கள் இருவரும் காரில் புறப்பட்டனர். கோபக்குமார் காரை ஓட்டினார்.
மூவரும் நாகர்கோவில் வந்து தங்க கட்டிகளை கொடுத்துவிட்டு ரூபாய் 76 லட்சத்து 40 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் நெய்யாற்றின்கரை புறப்பட்டனர். அப்போது தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் காரில் வந்த 4 பேர் திடீரென நகை கடை ஊழியர்கள் சென்ற காரை வழிமறித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 76 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் போல நடித்து கொள்ளை அடித்தனர். அவர்களில் இருவர் காவல்துறை சீருடையில் இருந்தனர், மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்தனர். எனவே இதுகுறித்து நகை கடை உரிமையாளர் சம்பத்துக்கு தகவல் கொடுத்தனர் நகை கடை ஊழியர்கள். இதை தொடர்ந்து அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினருடைய தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், டிரைவர் கோபக்குமார் தங்கக்கட்டிகளை பல இடங்களுக்கு சென்று விற்று பணத்தை முதலாளியிடம் கொடுப்பது வழக்கம். இதற்கிடையே அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முதலாளிக்கு துரோகம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி, தான் தங்க கட்டிகளை விற்றுக் கொண்டு வரும் பணத்தை நண்பர்கள் காவல்துறை சீருடையில் வந்து கொள்ளையடிக்க வேண்டும். இதுவே அவர் திட்டம். பணத்தை கொள்ளையும் அடிக்க வேண்டும் ஆனால் அதில் மாட்டிக் கொள்ளவும் கூடாது என இவ்வாறு திட்டம் வகுத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் தீவிர விசாரணை சிக்கிக்கொண்டார். பின்னர் காவல்துறையினர் ஐந்து பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 76 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.