மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மறைவையொட்டி கன்னியாகுமரி மக்களவை தொகுதி கலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருக்கிறது என்று மக்களவை செயலகம் அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
வசந்தகுமார் அவர்கள் கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்பி ஆகியிருந்தால் இந்த நிலையில் அவர் மறைவு இதையடுத்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக மக்களவை செயலகம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலமாக இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற இருக்கிறது. அத்துடன் இந்த மக்களவை தொகுதி தேர்தலும் நடைபெறுமா ? அல்லது அதற்கு முன்பாகவே நடைபெறுமா ? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலக அதிகாரி சத்யபிரதா சாகு முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவர் தான் பரிந்துரை செய்வார்.