கன்னியாகுமரியில் பரவலாக பெய்யும் மழையின் காரணமாய் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரியில் இரண்டு நாட்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மழை பெய்த அளவு மில்லி லிட்டரில் விவரங்கள் வெளியாகியுள்ளன. பெருஞ்சாணி 13.6 சிற்றாறு 1.18 பேச்சிப்பாறை 15.8 புத்தன் அணை 12 முக்கடல் 10 களியல் 4.3 மாம்பழத்துறையாறு 15 கன்னிமார் 17.2 பூதப்பாண்டி 11.2 குழித்துறை 7 நாகர்கோயில் 13 மயிலாடி 14.4 கொட்டாரம் 14.8 சுருளக்கோடு 11.4 குளச்சல் 18.6
பாலமோர் 22.4 இரணியல் 8.2 தக்கலை 1.2 ஆரல்வாய்மொழி 8.4 அடையாமடை கோழிப்போர்விளை 15 முள்ளங்கினாவிளை 13 குரருந்தங்கோடு 12.8 ஆணைக்கிடங்கு 13.2 ஆகிய அளவுகளில் மழை பதிவாகி உள்ளது. நேற்றைய மழையால் பெருஞ்சாணி அணையில் வினாடிக்கு 330 கன அடி நீரும் பேச்சிப்பாறை அணையில் வினாடிக்கு 550 கன அடி நீரும் வருகிறது. மழை காரணமாக கன்யாகுமரியில் அனைத்து அணைகளும் மூடி இருக்கின்றன.