கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலிருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோட்டார் சாலையில் கழிவுநீர் மழை நீருடன் சேர்ந்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மயிலாடி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் ஆகிய பகுதிகளிலும் இன்று காலையில் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- குருந்தன்கோடு 3, ஆணை கிடங்கு 3.4, திற்பரப்பு 11.8, பூதப்பாண்டி 4.22, நாகர்கோவில் 2.6, கொட்டாரம் 2.4, ஆரல்வாய்மொழி 1, மயிலாடி 2.6.