காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சத்யபிரதா சாகு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரசைை சேர்ந்த திரு வசந்த் குமார் காலமானதை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இதற்காக விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.