காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸ்க்கு ஜோடியாக ஓவியா வேதிகா நிக்கி தம்போலி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த நடிகை அலெக்ஸாண்ட்ரா. இவர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்.
அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டுப் பிரிந்த தாகவும் இதனால் அலெக்ஸாண்ட்ரா மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.