மாவட்ட அளவிலான கபடி போட்டியை எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அமெச்சூர் கபடி கழகம், சீவூர் ஜாலி பிரதர்ஸ் இணைந்து ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியும், வீரர்கள் தேர்வு போட்டியும் 2 நாட்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதன் தொடக்க விழாவுக்கு பெரிய தனக்காரர்கள் மற்றும் ஜாலி பிரதர்ஸ் குழுவினர் தலைமை தாங்கியுள்ளனர். அதன்பின் காளியம்மன் அறக்கட்டளை, இளைஞர் அணியினர் மற்றும் விநாயகர் குழுவினர் முன்னிலை வகித்துள்ளனர்.
பிறகு ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், நகரமன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன், ஒன்றிய உறுப்பினர் மகேந்திரன், தி.மு.க பேச்சாளர் குடியாத்தம் குமரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ஏகாம்பரம், தி.மு.க ஒன்றிய பொறுப்பாளர்கள் எஸ். முரளிதரன், பிரதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். இதனை அடுத்து கபடி போட்டிகளை தி.மு.க மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலுவிஜயன் ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த போட்டிகளில் இம்மட்டத்தில் பல பகுதிகளில் வசிக்கும் 70 ஆண்கள் அணியும் மற்றும் 10 பெண்கள் அணியும் என மொத்தமாக 80 அணிகள் கலந்து கொண்டு விளையாடியுள்ளனர். இந்த போட்டி 2 நாட்கள் நடைபெற்றதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கபடி கழக தலைவர் சீவூர் சேட்டு, மாவட்ட தலைவர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.