Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மதுபானமா? நீதிமன்றம் அதிருப்தி …!!

ஒரு கையில் கபசுரக் குடிநீர் மறுகையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவையும் அரசு கொடுக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனவை  தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதால் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல், எந்த வகையிலும் மதுவை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில்  சொல்லப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் ...

அப்போது,  அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்க அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்கில் வைக்கபட்ட  கோரிக்கையும் இந்த வழக்கில் வைக்கப்பட்ட கோரிக்கையும் ஒன்றாக இருப்பினும் அதற்கான காரணங்கள் வேறாக இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் என்னவெனில் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் உள்ள சிக்கலை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் கபசுர குடிநீரையும், மறு கையில் மதுவையும் வைத்திருப்பது முரண்பாடாக உள்ளது என கருத்து தெரிவித்து வழக்கின் தீர்ப்பினை ஒத்தி வைத்து இருக்கிறார்.

Categories

Tech |