Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை… அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி… திரளானோர் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிக்கொட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவிற்கு உட்பட்ட அரளிக்கோட்டை ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் கபசுரக் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கபசுர குடிநீரைப் பெற்றுக் கொண்டனர்.

மேலும் கபசுரக் குடிநீர் ஆயிரத்து 500 பேருக்கு வழங்கப்பட்டது. அதில் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி காளிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், வார்டு உறுப்பினர்கள், துணை செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |