வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார்.
மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும்.
பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டம் ஆகிய தைரியமான முடிவுகளை மேற்கொண்டு நம் நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இதே போன்று விலை ஏற்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை குறை சொல்கிறார்கள். மட்டன் இறைச்சியை 700 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், பீட்சாவை 500 ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், 10 ரூபாய் மற்றும் 40 ரூபாய்க்கு கிடைக்கும் வெங்காயம் மற்றும் தக்காளி, விலை ஏறிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளின் விலையை குறைக்க அவர் பிரதமர் ஆகவில்லை. விலையேற்றம் எதனால் ஏற்படுகிறது? என்பதை புரிந்து கொண்ட மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை குறை சொல்ல மாட்டார்கள். அவர் தொடர்ந்து நாட்டை வழிநடத்த வேண்டுமென்று கூறியிருக்கிறார்.