Categories
உலக செய்திகள்

காபூல் நகரின் எல்லையை சூழ்ந்த தலீபான்கள்.. வாகனங்களில் தப்பியோடும் மக்கள்.. வெளியான பரபரப்பு வீடியோ..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரம் காபூல் நகரின் எல்லையை தலிபான் தீவிரவாதிகள் சூழ்ந்து கொண்டதால் மக்கள் அந்நகரில் இருந்து தப்பிச்செல்வதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் தலைநகரான காபூலின் எல்லையில் சூழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் காபூல் நகரத்தை போர் மற்றும் மோதலின்றி கைப்பற்றப் போவதாக தலிபான்கள் அறிக்கை விட்டுள்ளார்கள்.

https://twitter.com/newsistaan/status/1426845523948892175

மேலும் போராளிகள் கலவரத்தை ஏற்படுத்துவதை தவிர்ப்பதற்காகவும், நகரில் இருந்து வெளியேற விரும்பாத மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் காபூலிலிருந்து மக்கள் வாகனங்களில் தப்பி வருகிறார்கள். எனவே அந்த நகரில் நீளமான வரிசையில் வாகனங்கள் நிற்கிறது.

எனவே, அந்நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், காபூலில் இருக்கும் ஜனாதிபதி அரண்மனையில், தலிபான் அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி, அஷ்ரப் கனி சிறிது நேரத்தில் பதவி விலகப்போவதாகவும், அதன் பின்பு தலிபான்களின் தலைவர் ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

Categories

Tech |